தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குளத்தை சீரமைக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு  5ஆம் வகுப்பு மாணவி கடிதம்! - girl writes letter to CM MK Stalin

திருநெல்வேலி: மேலப்பாளையம் கன்னிமார்குளத்தில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவி ஆகிலா
மாணவி ஆகிலா

By

Published : May 15, 2021, 10:47 AM IST

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் ஹாமிம்புரம் பகுதியில் ஏரி போன்று அதிக கொள்ளளவில் கன்னிமார்குளம் என்ற குளம் உள்ளது. சமீப காலமாக அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கன்னிமார் குளத்தில் கலக்கிறது. இப்பகுதியில் பாதாள சாக்கடை இல்லாததால், கன்னிமார்குளத்தில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி நோய்பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும், மனுக்கள் அளித்தும் பிரச்னைகள் தீர்ந்தபாடில்லை எனப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், மேலப்பாளையம் ஹாமிம்புரம் 3ஆவது தெருவைச் சேர்ந்த ஷாபி ரதமத்துல்லாவின் மகள் ஆகிலா (10) என்ற ஐந்தாம் வகுப்பு மாணவி, கன்னிமார் குளத்தில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மாணவியின் கடிதம்

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின், பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை தெரியப்படுத்தினால் 100 நாட்களுக்குள் சரிசெய்யப்படும் என அறிவித்துள்ளதோடு, அதற்கென தனி ஐஏஎஸ் அலுவலரையும் நியமித்துள்ளார். அந்த நம்பிக்கையில் சிறுமி ஆகிலா, தனது தெருவில் இருக்கும் கழிவுநீர் பிரச்னை குறித்து கடிதம் எழுதி, அக்கடிதத்தை முதலமைச்சருக்கு அனுப்பியுள்ளார். சிறு வயதிலேயே தன்னை சுற்றியிருக்கும் சமூக பிரச்னைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என ஆர்வம் காட்டும் சிறுமி ஆமிலாவுக்கு பலர் பாரட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:குடிநீர் பிரச்னைக்கு மூன்று நாட்களில் தீர்வு காண வேண்டும் - எச்சரித்த எம்எல்ஏ!

ABOUT THE AUTHOR

...view details