திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே 17 வயதான சிறுமி ஒருவர் வசித்துவந்தார். இந்நிலையில் இன்று (நவ. 13) சிறுமி, திடீரென வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேலப்பாளையம் காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பிவைத்தனர். காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சிறுமி, தனது தம்பியுடன் சேர்ந்து செல்போன்பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
அப்போது சிறுமியின் தம்பி செல்போனை தராததால், இருவருக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சிறுமி தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என விசாரித்துவருகின்றனர். செல்போன் தகராறில் இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:ஆயுதப்படை காவலர் தூக்கிட்டுத் தற்கொலை!