திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர், கிளாக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியப்பன் (57). இவர் வீரவநல்லூர் ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் ஆசிரியராக பணிபுரியும் சேரன்மகாதேவி, காலங்கரை தெருவை சேர்ந்த லீனா (57) என்பவரும் அவருடைய சகோதரி பாளையங்கோட்டை, வி.எம்.சத்திரம் பகுதியை சேர்ந்த சலோமி (60) ஆகிய இருவரும் சேர்ந்து TNEMIS App என்ற செயலி மூலமாக தங்களுடன் பணிபுரியும் சக ஆசிரியர்களின் வங்கி கணக்குகளின் தகவல்களை பெற்றுள்ளனர்.
பின்னர் சேரன்மகாதேவியில் உள்ள ஆசிரியர்களுக்கான கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்களின் முகவரியில் அவர்களுடைய புகைப்படத்தை மாற்றியும், ஆசிரியர்களுடைய கையொப்பம் போலவே போலியாக கையொப்பத்தை போட்டு சங்கத்தில் ரூ.54 லட்சம் கடனாக பெற்று பணமோசடியில் ஈடுபட்டுள்ளனர்.