திருநெல்வேலி : பணகுடி அருகேவுள்ள குத்திரபாஞ்சான் அருவியை அடுத்த கன்னிமாரா ஓடையில் குளிக்கச்சென்ற 15 பேர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர். இதனையறிந்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பின்னர், உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வள்ளியூர் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், வெள்ளத்தில் சிக்கிய 14 பேரை மீட்டனர். இதில், சின்ன முட்டத்தைச் சேர்ந்த நாயகம் என்பவரை மட்டும் காணவில்லை எனத்தெரிகிறது. அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.