தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருநெல்வேலியில் துப்பாக்கியுடன் வலம் வந்த மான் வேட்டை கும்பல் கைது! - arrest

திருநெல்வேலியில் துப்பாக்கியுடன் வலம் வந்த மானை வேட்டையாடி வந்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

deer
மான்

By

Published : Apr 30, 2023, 11:19 AM IST

துப்பாக்கியுடன் வலம் வந்த மான் வேட்டை கும்பல் கைது!

திருநெல்வேலி:பாப்பாக்குடி பகுதியில் நேற்று (ஏப்.29) அதிகாலையில் எஸ்.ஐ ஆபிரகாம், காவல‌ர் முத்துராஜ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் இறந்த நிலையில் மான் மற்றும் 2 துப்பாக்கி, தோட்டாக்கள், கத்தி, உள்ளிட்ட பல ஆயுதங்கள் இருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பாப்பாக்குடி அருகேயுள்ள பனையங்குறிச்சி என்ற பகுதியில் துப்பாக்கியால் மானை வேட்டையாடியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து நெல்லை வனச்சரகர் சரவணக்குமார் தலைமையிலான வனத்துறையினர் பாப்பாக்குடி காவல் நிலையம் வந்து வேட்டைக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டாக்கள், இறந்த மான், கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் மானை வேட்டையாடிய கல்லூரை சேர்ந்த ராமையா, சேரன்மகாதேவியை சேர்ந்த குமார், ரமேஷ், ஊத்துமலை சேர்ந்த கிருஷ்ணா, மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த யோஸ்வா ராஜ், வாடிப்பட்டியை சேர்ந்த போவாஸ், கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகிய 7 பேர் கொண்ட கும்பலையும் கைது செய்து வனத்துறையினர் அழைத்து செய்தனர்.

மேலும் அந்த கும்பலால் சுட்டு கொல்லப்பட்ட மான் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வன உயிரினங்கள் அழிந்து வரும் சூழலில் இவ்வாறு மான் போன்ற அரியவகை உயிரினத்தை வேட்டையாடியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மலேசியாவில் இருந்து சென்னைக்கு 23 பாம்புகளை கடத்தி வந்த பெண் பயணி! அதிர்ந்து போன அதிகாரிகள்

ABOUT THE AUTHOR

...view details