தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை கோயில் யானைக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகள் பரிசளித்த பக்தர்கள் - தமிழ்நாட்டிலேயே முதல்முறை! - devotees wore sandals to a temple elephant due to joint pain

நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்கு மூட்டு வலி காரணமாக மருத்துவ குணம் வாய்ந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தோல் செருப்புகள் செய்த பக்தர்கள் யானைக்கு அதனை அணிவித்தனர்.

மூட்டு வலி காரணமாக கோவில் யானைக்கு செருப்பு அணிவித்த பக்தர்கள்!!
மூட்டு வலி காரணமாக கோவில் யானைக்கு செருப்பு அணிவித்த பக்தர்கள்!!

By

Published : Jul 2, 2022, 4:08 PM IST

திருநெல்வேலி டவுன் பகுதியில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லையப்பர் காந்திமதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் யானையின் பெயர் காந்திமதி.

13 வயதில் கோயிலுக்குள் வந்தது. இப்போது யானைக்கு 52 வயதாகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு யானையை சோதனை செய்த மருத்துவக் குழுவினர் வயதுக்கு ஏற்ற எடையைத் தாண்டி கூடுதலாக 300 கிலோ உள்ளது. எனவே, யானையின் எடையைக் குறைக்க வேண்டும் எனக் கூறினர்.

யானையின் டயட்: இதனைத்தொடர்ந்து நாள்தோறும் யானையை நடைப்பயிற்சிக்கு அழைத்துச்செல்வது, அதிக இனிப்பு உள்ள கரும்பை குறைவாக கொடுப்பது, நார்ச்சத்து மிகுந்த உணவு அதிகம் கொடுப்பது எனத்தொடர் உணவுக்கட்டுப்பாடு மற்றும் பயிற்சிகளால் யானை 6 மாதங்களில் 150 கிலோ எடை குறைந்தது.

தற்போது சரியான எடையை அடைந்திருந்தாலும், வயது முதிர்வின் காரணமாக மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் யானை நீண்ட நேரம் நடப்பதற்கும், நிற்பதற்கும் சிரமப்படுகிறது.

நெல்லை கோயில் யானைக்கு ரூ.12ஆயிரம் மதிப்பில் செருப்புகள் பரிசளித்த பக்தர்கள் - தமிழ்நாட்டிலேயே முதல்முறை!

வலியில் இருந்து தப்ப மருத்துவ குணமிக்க செருப்பு:யானை காந்திமதிக்கு நடக்கும்போது கால் வலி ஏற்படாமல் இருக்கவும், மூட்டு வலியிலிருந்து தப்பிக்கவும் மருத்துவ குணம் வாய்ந்த ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தோல் செருப்புகள் செய்த பக்தர்கள் யானைக்கு அதனை அணிவித்தனர்.

தமிழ்நாட்டிலேயே நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் யானைக்குத்தான் முதன்முதலாக செருப்பு அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: TNPL 2022: சஞ்சய் யாதவின் மிரட்டலடியில் நெல்லை அணி 'ஹாட்ரிக்' வெற்றி

ABOUT THE AUTHOR

...view details