திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் சுமார் 8,618 மெகாவாட் திறனில், காற்றாலை மின் நிலையங்களை அமைத்துள்ளன. ஆண்டுதோறும் மே முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் வரை தென் மாவட்டங்களில் காற்று அதிகளவில் வீசக்கூடும் என்பதால் காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைக்கும்.
2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி காற்றாலைகளில் இருந்து, அதிகபட்சமாக 5,129 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. இதுவே ஒரு நாளில் காற்றாலைகளில் இருந்து மின்வாரியம் உற்பத்தி செய்த அதிக கொள்முதல்.