திருநெல்வேலியில் பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றினை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ‘தூய பொருணை நெல்லைக்கு பெருமை’ என்ற திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் ஆற்றினை சுற்றி தூய்மை பணிகள் நடந்துவருகின்றன. அந்த வகையில், இன்று (ஏப்.23) பாபநாசம் மேற்குத்தொடர்ச்சிமலை கானிகுடியிருப்பு முதல் மருதூர் அணைகட்டு வரை பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள், அரசு அதிகாரிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மாநகர் பகுதிகளில் நெல்லை மாநகராட்சி ஆணையர், தீயணைப்புத் துறை அலுவலர்கள் படகு மூலம் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தூய்மைப் பணியை செய்வோருக்கு ஊக்கமளிக்கும் வகையில் தீயணைப்புத் துறை அலுவலர் வீரராஜ், தாமிரபரணி நதியை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கருத்துக்களை உள்ளடக்கிய பாடல் ஒன்றை பாடினார்.