நெல்லை மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி ஆலயத்தில் கடந்த 3ஆம் தேதி ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகப்படிதாரர் என 12நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, முதலாம் மண்டகப்படிதாரர்களுக்கு நகைக்கடை பஜாரில் பந்தல் அமைத்து இருந்தனர்.
ஆடித்தபசு பெருவிழாவில் தீ விபத்து: ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
நெல்லை: சங்கரன்கோவிலில் ஆடித்தபசு பெருவிழாவையொட்டி ஒன்றாம் மண்டகப்படிதாரருக்கு அமைக்கப்பட்ட பந்தலில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
இந்நிலையில் இந்த பந்தல் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தால் சுமார் நான்கு லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.