தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜம்முவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம் - ஜம்முவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

திருநெல்வேலி: ஜம்முவில் வீரமரணம் அடைந்த தமிழக வீரரின் உடல் மூன்று நாள்களுக்குப் பிறகு சொந்த ஊர் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

வீரவணக்கம்
வீரவணக்கம்

By

Published : May 7, 2020, 11:59 PM IST

ஜம்மு காஷ்மீரின் குப்ராவ் பகுதியில் கடந்த 4ஆம் தேதி இரவு பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் சந்திரசேகர் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் மூன்று நாள்களுக்குப் பிறகு அவரது சொந்த ஊரான தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த மூன்று வாய்க்கால் பகுதிக்கு இன்று கொண்டு வரப்பட்டது.

வழி நெடுகிலும் பொதுமக்கள் அவருக்கு மரியாதை செலுத்தினர். பல இடங்களில் பதாகைகள் மற்றும் அஞ்சலி செலுத்தும் வகையில் மலர் அலங்காரங்கள் செய்திருந்தனர். முன்னதாக இங்கு ராணுவ மரியாதையுடன் அவரது உடலை நல்லடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்தன.

தமிழக அரசு சார்பில் தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் சந்திரசேகர் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சந்திரசேகரின் உடல் இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த சந்திரசேகருக்கு ஜெனி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. சந்திரசேகரின் தந்தை செல்லச்சாமியும் தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து பணியில் இருக்கும்போது மரணமடைந்தார். தொடர்ந்து மகனும் பணியில் இருந்த போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளதால் ஊர் பொதுமக்கள் மத்தியில் இவர்களது குடும்பம் மீது ஒருவித மரியாதை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான ஊர்ப் பொதுமக்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

Tvl

ABOUT THE AUTHOR

...view details