திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து கருத்துக்கேட்பு கூட்டம், வருவாய் ஆணையர் தலைமையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் ஷில்பா பிரபாகர், கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் ஆகியோர் முன்னிலையில் குற்றாலத்தில் நடைபெற்றது.