தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய் குறுக்கிட்டதால் விபத்து - தந்தை, மகள் உயிரிழந்த சோகம் - தமிழ் விபத்து செய்திகள்

திருநெல்வேலி : விக்கிரமசிங்கபுரம் அருகே நாய் குறுக்கே சென்றதால் ஏற்பட்ட விபத்து காரணமாக இரு சக்கர வாகனத்தில் சென்ற தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Father, daughter killed in accident - Police investigation

By

Published : Jun 30, 2020, 10:48 PM IST

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (வயது 42). இவர் தனது மகள் சுவிட்சாவுடன் (வயது 10) இன்று அம்பாசமுத்திரத்தில் இருந்து தனது ஊருக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அகஸ்தியர்பட்டி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது நாய் ஒன்று குறுக்கே வந்ததில், இரு சக்கர வாகனம் நாயின் மேல் மோதி தொடர்ந்து எதிரே செங்கல் ஏற்றி வந்த டிராக்டரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த தந்தை, மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமசிங்கபுரம் காவல் துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details