திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சீலாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளி முத்து. இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் இவரது மனைவிக்கும் இவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதனால், இவரது மனைவி இவரை பிரிந்து கடந்த ஆறு மாத காலமாக பணகுடியில் வசித்து வருகிறார். முத்துவுடன் அவரது மகன் வேல்முருகன் மட்டும் வசித்து வந்துள்ளார்.
முத்துவின் மகன் வேல்முருகன் வள்ளியூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த மூன்று தினங்களாக வேல்முருகன் கல்லூரிக்கு வராததால் அவரது நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அவரது செல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் அவரது வீட்டிற்கே சென்று நேரில் பார்த்துள்ளனர். அப்போது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.