தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லையில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி! - நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே, புகார் கொடுக்க வந்த விவசாயி திடீரென தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லையில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!
நெல்லையில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

By

Published : May 30, 2022, 6:57 PM IST

திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள கால்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன். இவருக்கும் இவரது சகோதரருக்கும் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. தற்போது இந்த நிலத்தை சில தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். எனவே, இதுகுறித்து ஐயப்பன் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று (மே 30) நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றுள்ளது. இதிலும், தனது புகார் மனுவை அளிப்பதற்காக ஐயப்பன் வந்துள்ளார். அப்போது மேலும் மனமுடைந்த ஐயப்பன், திடீரென கையில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

நெல்லையில் புகார் கொடுக்க வந்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை முயற்சி!

இதனை கண்ட காவல்துறையினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புகார் அளிக்க வந்த நபர், விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பசுவின் வாயில் வெடித்த வெடிமருந்து - துடிதுடித்து இறந்த பசு

ABOUT THE AUTHOR

...view details