திருநெல்வேலி: அம்பை அருகேயுள்ள கீழ ஏர்மாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி (48). விவசாயியான இவர், நெல் அறுவடை இயந்திரத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் துரைப்பாண்டிக்கும், அவரது உறவினர் குடும்பத்திற்கும் கடந்த சில வருடங்களாக வயல் வரப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறால் முன்பகை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
கல்லால் அடித்துக் கொலை
மேலும் கடந்த 4 நாள்களுக்கு முன்னர் நடைபெற்ற கோயில் திருவிழாவிலும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஆக.20) காலை துரைப்பாண்டி வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, துரைப்பாண்டியின் உறவினர்கள் அவரை கல்லால் அடித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர், துரைப்பாண்டியின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், துரைப்பாண்டியின் உறவினர்கள் சிலரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஊராட்சி மன்றத் துணை தலைவர் வெட்டிக்கொலை!