தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரம்: நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

திருநெல்வேலி: தூத்துக்குடி விவசாயி கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாம் தமிழர்
நாம் தமிழர்

By

Published : Sep 22, 2020, 10:12 AM IST

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வன் சில நாள்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் வைத்து மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில், சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் திருமணவேல் குடும்பத்தினருக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இடையே நிலவிய நிலப் பிரச்சனை காரணமாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனின் தூண்டுதலின் பேரில் திருமணவேல்தான், தனது மகனை கொன்று விட்டதாக கூறி செல்வனின் தாயார் எலிசபெத் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்பட 6 பேர் மீது திசையன்விளை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையில் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இருப்பினும் இந்த வழக்கில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி உயிரிழந்த செல்வனின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட செல்வனின் உடல் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் உயிரிழந்த செல்வனின் குடும்பத்திற்கு நியாயம் கேட்டும் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்யக்கோரியும் திருநெல்வேலி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நேற்று (செப்டம்பர் 21) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.

இதுகுறித்து கண்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம் சொக்கன் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒன்றிய செயலாளர் செல்வனை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டனர்.

ஆனால் விபத்தில் அவர் உயிரிழந்ததுபோல் காட்டியுள்ளனர். அதிமுக பிரமுகர் திருமணவேல், காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தூண்டுதலின்பேரில் இந்த கொலை நடந்துள்ளது.

தற்போது இந்த சம்பவத்தை விபத்துபோல் சித்தரித்து வருகின்றனர். எனவே காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகரை உடனடியாக கைது செய்ய வேண்டும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் பெற்றுத்தர வேண்டும் என்று கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details