தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குழந்தைப் பாக்கியம் வேணுமா... நாங்க இருக்கோம்' - நூதன மோசடியில் போலி மருத்துவர்! - fake doctor arrested at tenkasi

தென்காசி: பாவூர்சத்திரத்தில் குழந்தைப் பாக்கியம் தருவதாகக் கூறி, கிராம மக்களிடம் நூதன மோசடியில் ஈடுபட்ட போலி மருத்துவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

fake doctor
நூதன மோசடியில் போலி மருத்துவர்

By

Published : Dec 20, 2019, 8:32 AM IST

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள செட்டியூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த போலி மருத்துவர் சீனிவாசன், தினேஷ், கோகுல் ஆகியோர் சொகுசு காரில் வந்து, ' குழந்தை இல்லாத தம்பதியர்களிடம் குழந்தை பாக்கியம் கிடைக்க, நாங்கள் மருந்து மாத்திரைகள் தருவதாக' ஆசை வார்த்தையில் பேசி மயக்கியுள்ளனர்.

இதை நம்பிய பொது மக்கள் ரூபாய் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கொடுத்துள்ளனர். பின்னர் சில மாதங்களில், பணம் வாங்கிய மருத்துவர்களை சிகிச்சைக்காக அழைத்த போது, தொடர்ச்சியாக செல்போன் அனைத்து வைக்கப்பட்டதால் சந்தேகம் அடைந்தனர்.

பின்னர் அருகிலுள்ளவர்களிடம் கூற அவர்களும் பணம் கொடுத்து ஏமாந்திருப்பது தெரிய வந்தது. பின்னர் பல முயற்சிகளுக்குப் பிறகு செல்போனில் சீனிவாசனை தொடர்பு கொண்ட மக்கள், அவரை செட்டியூர் பகுதிக்கு வரவழைத்து கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

நூதன மோசடியில் போலி மருத்துவர்

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அவர்களைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் . அதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த சீனிவாசன் , தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உள்ள கிராம மக்களை குறிவைத்து பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கிராம மக்கள் போலி மருத்துவர்களை நம்பி பணத்தை அளித்து ஏமாற வேண்டாம் எனச் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னையில் கஞ்சா செடி வளர்ப்பு: மர்ம நபருக்கு வலைவீச்சு!

ABOUT THE AUTHOR

...view details