தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி! - Junction Railway Station

திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

extreme prevention rehearsal

By

Published : Jul 17, 2019, 3:18 PM IST

திருநெல்வேலி டவுன் பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் அதிகளவிலான பயணிகள் வந்து செல்கின்றனர். அதேபோல் வடமாநிலங்களில் இருந்தும் பயணிகள் அதிகளவில் பிழைப்பு தேடி நெல்லை மாவட்டத்திற்கு வருகின்றனர். இந்நிலையில், சந்திப்பு ரயில் நிலையத்தில் போதை பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பது, தீவிரவாத அச்சுறுத்தல்களை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி மோப்பநாய் உதவியுடன் நடைபெற்றது.

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் தீவிரவாத தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி நெல்லை உட்கோட்ட ரயில்வே காவல்துறை துணை கண்காணிப்பாளர் அன்பழகன் தலைமையில் சுமார் 40க்கும் மேற்பட்ட காவல்துறையினர் கலந்துகொண்டனர். இதில் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details