திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின்படி, மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையர் சுகி பிரேமலா தலைமையில் மாவட்டப் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவு பொருள்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வில் இரண்டாவது நடைமேடையிலுள்ள ஸ்வீட் ஸ்டால் கடை ஒன்றில் காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அலுவலர்கள் உடனடியாக கடையில் விற்பனையை நிறுத்தி, உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலையடுத்து அங்கு விரைந்த உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராமசுப்பிரமணியன், சங்கரலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு நடத்தினர்.
ஆய்வில் பல்வேறு நிறுவன குளிர்பான பாட்டில்கள் காலாவதி தேதிக்குப் பிறகும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன.