திருநெல்வேலி மாவட்டம் கடலோரப் பகுதிகளான கூடங்குளம், இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி உள்ளிட்ட இடங்களில் நேற்று (ஏப்.29) மாலை 3.38 மணி அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அங்கு வசிக்கும் பொதுமக்கள் சுமார் ஐந்து விநாடிகள் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர்.
நில அதிர்வு சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு! - திருநெல்வேலி அண்மைச் செய்திகள்
திருநெல்வேலி : திருநெல்வேலி, கன்னியாகுமரி கடலோர பகுதிகளில் நேற்று (ஏப்.29) லேசான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்நிலையில் வீடு குலுங்குவது போன்ற சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
![நில அதிர்வு சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு! நில அதிர்வு ஏற்பட்டதாக வெளியான சிசிடிவி காட்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11592772-thumbnail-3x2-earthquake.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடலுக்குள் சுமார் அறுபது கி.மீ தொலைவில் 2.7 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர். கன்னியாகுமரி கடலோர பகுதி மக்களும் நில அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்தனர். இந்நிலையில் திருநெல்வேலி ராதாபுரம் பகுதியில் வீடு ஒன்று குலுங்குவது போன்ற சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானது. மொத்தம் ஆறு வினாடிகள் மட்டுமே இந்த காணொலி ஒளிபரப்பாகிறது. இதனை கண்ட பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : ஆக்சிஜன் முகக்கவசம் - மதுரை காமராஜர் பல்கலை. பேராசிரியரின் அசத்தல் கண்டுபிடிப்பு