இன்றைய செய்திகள், நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - ஆடி வெள்ளி
தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு, தனியார் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு, கோவை, திருப்பூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு, கேரளத்திற்கு மத்திய குழு, திருநெல்வேலி மனோன்மணியம் பெ. சுந்தரனார் பல்கலையில் பேராசிரியர் பணிக்கு நேர்காணல், ஆடி வெள்ளி வழிபாடு என இன்றைய நிகழ்வுகளை பார்க்கலாம்.
ETV BHARAT Important events to look for today
ஹைதராபாத் : இன்றைய செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
- தமிழ்நாட்டில் ஊரடங்கு- முதலமைச்சர் ஆலோசனை:தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவலுக்கு பின்னர் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து காணப்பட்டன. இந்நிலையில் கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்து காணப்படுகின்றன. இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக இன்று ஆலோசனை நடைபெறவுள்ளது.
- தனியார் கல்விக் கட்டணம்:தனியார் கல்லூரிகளில் கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
- விவசாயிகள் குறைதீர் கூட்டம்:திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் காணொலி வாயிலாக வெள்ளிக்கிழமை (ஜூலை 30) நடைபெறுகிறது.
- மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு:17ஆவது மக்களவையின் 6ஆவது மழைக்கால கூட்டத்தொடர் அமர்வு ஜூலை 19ஆம் தேதி தொடங்கியது. இந்த அமர்வில் பெகாசஸ் உளவு மென்பொருள் விவகாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட விவகாரங்களை பேச வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில் அமர்வு இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
- கேரளத்திற்கு மத்திய குழு:அண்டை மாநிலமான கேரளத்தில் கரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் மத்திய குழுவினர் இன்று அங்கு செல்கின்றனர். கரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் மற்ற மாநிலங்களில் தொற்று குறைந்துவரும் நிலையில் கேரளத்தில் பாதிப்புகள் அதிகரித்து காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டும் மொத்த பாதிப்பில் 50 சதவீதம் கேரளத்தில் பதிவாகின்றன.
- பேராசிரியர் பணிக்கு நேர்காணல்:திருநெல்வேலி மனோன்மணியம் பெ. சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறை தற்காலிக உதவி பேராசிரியர் பணிக்கான நேர்காணல் இன்று (ஜூலை 30) நடைபெறுகின்றன.
- ஆடி வெள்ளி:இன்று ஆடி இரண்டாம் வெள்ளியை தொடர்ந்து அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.