தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தலைவன் ஃபுல் பார்ம்ல இருக்கார்' - விழா மேடையில் ஆட்சியரை புகழ்ந்த மாணவர் - திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

'சாரை பார்த்தா கலெக்டர் மாதிரியே தெரியல நண்பனை போல இருக்கிறார். தலைவன் ஃபுல் பார்ம்ல இருக்கார்' என விழா மேடையில் நெல்லை ஆட்சியரை மாணவர் ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஆட்சியரை புகழ்ந்து பேசிய  மாணவர்
ஆட்சியரை புகழ்ந்து பேசிய மாணவர்

By

Published : May 1, 2022, 8:25 PM IST

திருநெல்வேலி:தமிழ்நாட்டில் தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய தொழிலில் ஈடுபட விரும்புபவர்களுக்கு ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ நிறுவனம் மூலம் நெல்லை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 'கவ்டெக்தான்' என்ற பெயரில் போட்டிகளை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

இதில் உணவுப்பொருள்களில் கலப்படத்தைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் செயலி, தனி நபர்களின் சமூக பொருளாதார கல்வித்தகுதிகள் ஆகிய விவரங்கள் அடிப்படையில் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை எளிதாக பட்டியலிட்டு கொடுக்கும் செயலி உள்பட நான்கு போட்டிகளை அறிவித்திருந்தது.

இறுதிப் போட்டிகள் நேற்று (ஏப்.30) நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறையைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்துகொண்டனர். இறுதியில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விழா மேடையில் கோயம்புத்தூர் அரசு பொறியியல் கல்லூரி மாணவர் அஜித் என்பவர், நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை புகழ்ந்து தள்ளி அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். போட்டியில் வெற்றி பெற்று பரிசு வாங்கிய பின்பு அஜித் அனைவர் மத்தியிலும் பேசினார்.

ஆட்சியரை புகழ்ந்து பேசிய மாணவர்

அப்போது, 'சாரை பார்க்கும்போது ஒரு கலெக்டர் மாதிரி தோணல. நண்பன் போல பேசினார். தலைவரு ஃபுல் ஃபார்ம்ல இருக்காரு. யாரெல்லாம் மக்களுக்காக உழைக்கிறார்களோ அவர்களை தான் தலைவன் என்று அழைப்போம். ரொம்ப சந்தோஷமாக இருக்கு. எல்லா மாவட்டத்திலும் இதுபோன்ற போட்டிகளை நடத்த வேண்டும்' என்றார்.

இதையும் படிங்க:நடிகர் அஜித்குமார் பிறந்த நாள் - பிரபலங்கள் வாழ்த்து!

ABOUT THE AUTHOR

...view details