தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இரைதேடி வந்த பெண் யானைக்கு நேர்ந்த சோகம்! - மின்சாரம் தாக்கி பெண் யானை பலி

நெல்லை: பாபநாசம் அருகே மின்வேலியில் சிக்கிப் பெண் யானை உயிரிழந்ததையடுத்து தோட்ட உரிமையாளரிடம் வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

elephent death by electrict shoke in nellai
elephent death by electrict shoke in nellai

By

Published : Dec 11, 2020, 12:59 PM IST

நெல்லை மாவட்டம், பாபநாசம் அருகே மலையடிவாரத்தில் அனவன் குடியிருப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த செல்லக்குட்டி (77) என்பவர், தனக்குச் சொந்தமான தோட்டத்தில் மின்வேலி அமைத்து பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அந்த வழியாக இரை தேடி வந்த பெண் யானை ஒன்று, அந்த மின் வேலியில் சிக்கியதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.

இதையடுத்து தகவலறிந்து வந்த விக்ரமசிங்கபுரம் வனச்சரகர் பாரத் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் செல்லக்குட்டி வனத்துறையிடம், அனுமதி வாங்காமல் மின்வேலி அமைத்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பின்னர், உயிரிழந்த யானையை வனத்துறையினர் புதைத்தனர். மின்வேலியில் சிக்கிப் பெண் யானை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:

சங்கிலித் திருடனைப் பிடித்த காவலர்களுக்கு ராமநாதபுரம் எஸ்.பி. பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details