திருநெல்வேலி : நாட்டின் 76-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இநது அறநிலையத்துறைக்குட்பட்ட ஒரு சில கோவில்களில் மட்டும் கோவிலில் உள்ள பூஜை முறைப்படி தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். அதன்படி தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை நெல்லையப்பர் கோவிலில் 76-வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடப்பட்டது.
நெல்லையப்பர் கோவில் முன் அமைந்துள்ள விக்டோரியா மகாராணி வழங்கிய விளக்குத்தூண் அருகே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி தேசிய கொடியை ஏற்றினார்.