தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் 2ஆவது அணு உலையில் மின் உற்பத்தி தொடக்கம்! - kudankulam

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் முடிவடைந்து, மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.

கூடன்குளம்
கூடன்குளம்

By

Published : May 30, 2022, 6:54 PM IST

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இந்திய ரஷ்யா நாடுகளுக்கிடையேயான ஒப்பந்த அடிப்படையில் 2 அணு உலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் எரி பொருள் நிரப்பவும்,பராமரிப்பு பணிகளுக்கும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது அணு உலையில் யுரேனியம் நிரப்புவதற்காக, கடந்த 27ஆம் தேதி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து அந்நாட்டு அரசிற்கு சொந்தமான விமானம் மூலம் யுரேனிய எரிகோல்கள் மதுரை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இரண்டாவது அனு உலையில் எரிபொருள் நிரப்பபட்ட நிலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. இன்னும் ஓரிரு தினங்களில் மின் உற்பத்தி ஆயிரம் மெகாவாட்டை எட்டும் என கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு ரஷ்யாவிலிருந்து வந்த யுரேனியம்!

ABOUT THE AUTHOR

...view details