தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்: நெல்லையில் பரபரப்பு - nellai electric bike caught fire

நெல்லையில் சார்ஜ் ஏற்றும் போது எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்ததோடு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

electric bike caught fire
electric bike caught fire

By

Published : Sep 27, 2022, 7:30 PM IST

திருநெல்வேலி :அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் மொபைல் கடை நடத்தி வருபவரான ராமராஜனின் இருசக்கர வாகனம்தான் வெடித்து சிதறியுள்ளது. இதுகுறித்து ராமராஜன் விளக்கிய போது, காலையில் தனது இருசக்கர வாகனத்தை சார்ஜ் செய்து விட்டு வீட்டினருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்ததாக கூறினார்.

அப்போது திடீரென எலக்ட்ரிக் பைக் தீப்பற்றி எரிந்துள்ளது. என்ன செய்வதென்று அறியாமல் தீயை அணைப்பதற்காக தண்ணீரை ஊற்றியதாக கூறினார். இதனால் வாகனத்தின் பேட்டரி வெடித்து சிதறியுள்ளது. பேட்டரி வெடித்த வேகத்தில் வீட்டின் தரையில் இருந்த டைல்ஸ்கள் கூட உடைந்து சிதறியதாக விவரித்தார் ராமராஜன்.

சார்ஜ் ஏற்றிய போது தீப்பிடித்த எலக்ட்ரிக் பைக்

8 மாதங்களுக்கு முன்பு இந்த வாகனத்தை 70 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறும் ராமராஜன் தனது வீட்டில் இருந்தவர்களும், இந்த விபத்தைப் பார்த்து அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை என்று கூறுனார். இச்சம்பவமானது விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது போல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஏற்கனவே இப்பகுதியில் இதுபோல எலக்ட்ரிக் வாகனங்கள் எரிந்து தீயில் கருகியது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வெடித்து சிதறிய சரவண பவன் ஹோட்டல் ஏசி சிலிண்டர்.. ஒருவர் படுகாயம்..

ABOUT THE AUTHOR

...view details