நெல்லை: கொண்டாநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் டேனியல் ஆசீர். வயது 42. இவர் மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்துவருகிறார். இவர் பேட்டரி வாகனத்தை பயன்படுத்திவருகிறார். இந்நிலையில் இன்று (ஜூன்1) காலை தனது வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேட்டரி மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ஆசீர் வீட்டில் இருந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார். ஆனாலும் பைக்கிலிருந்து தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதையடுத்து அவர் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.