தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 11, 2022, 11:22 AM IST

ETV Bharat / state

நெல்லையில் விதியை மீறி தேர்தல் பரப்புரை - பறக்கும் படை எச்சரிக்கையால் கலைந்து சென்ற காங்கிரஸ் தலைவர்கள்!

திருநெல்வேலியில் மாநகராட்சித் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியினர் விதிகளை மீறி பரப்புரையில் ஈடுபட்டதாக பறக்கும் படை எச்சரித்ததையடுத்து கலைந்து சென்றனர்.

நெல்லையில் விதியை மீறி தேர்தல் பரப்புரை
நெல்லையில் விதியை மீறி தேர்தல் பரப்புரை

திருநெல்வேலி:நெல்லை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (பிப்ரவரி 10)தேர்தல் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கலந்து கொண்டு பேசும்போது ’இந்தியாவில் ஒவ்வொரு நபர்களும் தங்களுக்கு ஏற்ற உடைகளை அணிவார்கள். ஆனால், அந்த ஆடைகளை அணியக் கூடாது என யாரும் தெரிவிக்கமுடியாது. மோடி ஆட்சியில் சர்வாதிகாரம் நடைபெறுகிறது. இதை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம்’ எனப் பேசினார்.

சிறிது நேரம் பேசி விட்டு ரயிலுக்கு நேரம் ஆகிவிட்டதாகக் கூறி அழகிரி அங்கிருந்து சென்றுவிட்டார். அவர் வெளியே சென்ற சில நிமிடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென அங்கு சென்றனர்.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தான் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி காங்கிரஸ் கட்சியினர் பரப்புரை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து, அவர்கள் அங்கு சென்றிருக்கிறார்கள்.

நெல்லையில் விதியை மீறி தேர்தல் பரப்புரை

அப்போது பறக்கும்படையினர், 'இதுதேர்தல் நடத்தை விதிமுறை மீறல். ஆகவே, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என எங்களுக்குப் புகார் வந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளனர்.

இதைக் கேட்டுப் பதறிப்போன தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கூட்டத்தைப் பாதியிலேயே முடித்து விட்டுக்கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:'பொள்ளாச்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தியோரும் தேர்தலில் போட்டி' - செந்தில் பாலாஜி சாடல்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details