தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரே குடும்பத்தில் பதினோரு பேருக்கு கரோனா - eleven members from same family contracted corona

திருநெல்வேலி: கரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவிவரும் சூழலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

ஒரே குடும்பத்தில் பதினொரு பேருக்கு கரோனா
ஒரே குடும்பத்தில் பதினொரு பேருக்கு கரோனா

By

Published : Apr 8, 2021, 3:34 PM IST

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலும் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 500ஐக் கடந்துள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் 523 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று (ஏப்ரல். 8) ஒரே நாளில் மாவட்டத்தில் 79 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநகரப் பகுதியில் மட்டும் 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகரப் பகுதிக்கு உள்பட்ட பேட்டை செந்தமிழ் நகரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 450 வீடுகளில் உள்ள நபர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் ஒரே குடும்பத்தில் உள்ள ஆறு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'40 ஆண்டுகால நட்பு' - இறப்பிலும் இணைபிரியாத இந்து-முஸ்லீம் நண்பர்கள்

ABOUT THE AUTHOR

...view details