நெல்லை மாவட்டம் களக்காடு பகுதி அருகே அமைந்துள்ளது சிங்கிகுளம் கிராமம். இப்பகுதி முழுவதும் விவசாய பூமி என்பதால் நெல், வாழை, உளுந்து, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடப்பட்டு-வருகின்றது. இந்தப் பகுதியில் ஒரு பொத்தை மலையும் உள்ளது. பொத்தை சுனையில் எப்போதும் தண்ணீர் இருக்கும். இங்கு நான்கு கரடிகள் வசித்துவருகின்றன. மலை அடிவாரத்தில்தான் விவசாயமும் நடைபெற்றுவருகின்றது.
இங்கு பயிரிடப்படும் காய்கறிகளை தின்பதற்காகவும் அங்குள்ள குளத்தில் உள்ள மீன்களை உண்பதற்காகவும் கரடிகள் மாலை 6 மணிக்கு மேல் மலையிலிருந்து கீழே இறங்கிவருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக மலை அடிவாரத்தில் ஆடு மேய்க்கும் பெண்கள், ஆண்கள் துணையோடுதான் வந்துசெல்கின்றனர்.