திருநெல்வேலி: ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு கொண்டு வந்துள்ள அறிவிப்பு ஆணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப்.1) தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மத்திய அரசின் அறிவிப்புப்படி ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு சரிந்துவிடும் என போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து இந்திய மருத்துவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் அன்புராஜன் கூறுகையில், "மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். அதாவது மத்திய அரசு ஆயுர்வேத மருத்துவ துறையை சேர்ந்த மருத்துவர்களும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம் என்ற அபாயகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மருத்துவத் துறையில் கலப்படம் ஏற்படுத்தும் செயலாகும்.