திருநெல்வேலியில் நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாணவரணி, மாணவர் இயக்கங்களின் சார்பில் பாளையங்கோட்டை சித்தா கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாநில மாணவரணி துணை செயலாளர் செரீஃப் தலைமையில் நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - neet exam
திருநெல்வேலி: நீட் தேர்வு, மும்மொழிக் கொள்கை, மத்திய அரசின் கல்விக் கொள்கை ஆகியவற்றைக் கண்டித்து நெல்லையில் திமுக மாணவரணியினரும் மாணவர்கள் இயக்கங்களும் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
neet
இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞரணி அமைப்பாளர்கள் தளபதி, ராமச்சந்திரன், வெங்கடேஷன், தகவல் தொழில்நுட்பப்பிரிவு அமைப்பாளர் எட்வின் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.