திருநெல்வேலி: என்ஜிஓ காலனியைச் சேர்ந்த முதியவர் பழனி. இவர் திமுகவில் இருந்து வரும் நிலையில் இன்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில், மேயர் சரவணனிடம் மனு அளிப்பதற்காக வந்தார்.
அப்போது மேயர் முன்பு நின்று கொண்டு சினிமாவில் வசனம் பேசுவது போன்று, அரசியல் கலந்து நகைச்சுவையாக தனது குமுறலை வெளிப்படுத்தியது அரங்கில் சிரிப்பலையினை ஏற்படுத்தியது. பழனி பேசுகையில், ”யாரை கேட்டாலும், மேயரை பாருங்கள்... மேயரை பாருங்கள், கலெக்டரை பாருங்கள் என்கிறார்கள்... நிலைமை மோசமாக உள்ளது. உங்களிடம் இரண்டு நிமிடம் பேச வாய்ப்புக் கொடுங்கள்.
நான் கலைஞர் மாதிரி பேசுவேன். பராசக்தி வசனம் மாதிரி மனு எழுதி வந்துள்ளேன். நான் கலைஞரிடம் 15 நாட்கள் உறவாடியவன். என்னிடம் கலைஞர் பவர் இருக்கு. மேயர், துணை மேயர் பவர் இருக்கு. ஆனால், மாவட்டச் செயலாளர் எனக்கு அதிகாரம் தரவில்லை. கலைஞரும் எனக்குத் தரவில்லை.