தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தாமரை சின்னத்தில் ஐக்கியமான திமுக எம்எல்ஏ' - நெல்லையில் பரபரப்பு - தாமரை சின்னத்தில் ஐக்கியமான திமுக எம்எல்ஏ

திருநெல்வேலியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட குடை பிடிக்கப்பட்ட சம்பவத்தில், ஒரு விநோத நிகழ்வு நடந்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 9, 2023, 10:41 PM IST

'தாமரை சின்னத்தில் ஐக்கியமான திமுக எம்எல்ஏ' - நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி மாநகரின் பல்வேறு இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுவதால், இந்த சாலைகளை புதிதாக விரைந்து அமைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருநெல்வேலி ஸ்ரீபுரம் பகுதியில் இருந்து ஊருடையான் குடியிருப்பு பகுதி வரை ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சாலை பணிகள் அமைப்பதற்கான தொடக்க விழா மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.

மாநகராட்சி துணை மேயர் கேஆர் ராஜு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக சட்டப்பேரவை குழு தலைவருமான நயினார் நாகேந்திரன், திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் வருகை தந்தார். அதனைத்தொடர்ந்து வருகை தந்த நயினார் நாகேந்திரன் வந்தபோது, அவருக்கு தாமரைச் சின்னம் பொறித்த குடை தொண்டரால் பிடிக்கப்பட்டது.

இருவரும் நிகழ்வில் கலந்துகொண்டபோது நயினார் நாகேந்திரன் மற்றும் அப்துல் வகாப் வந்தபோதும் இருவருக்கும் சேர்த்து தாமரை சின்னம் பொறித்த குடை பிடிக்கப்பட்ட நிலையில், தாமரை சின்ன குடையின் கீழுள்ள நிழலில் இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களும் நின்றனர்.

இதனால், திமுக தொண்டர்கள் குடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென குரல் எழுப்பினர். குடையை அப்புறப்படுத்த பாஜக தொண்டர்கள் மறுக்க, அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இரண்டு கட்சி தொண்டர்களும் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர். விழா முடிந்த பிறகு இரு கட்சித் தொண்டர்களையும் அருகில் அழைத்த நயினார் நாகேந்திரன் அவர்களை சமாதானப்படுத்தி கைகுலுக்க செய்து, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:புதுக்கோட்டை சமஸ்தான மாமன்னருக்கு அஞ்சல் தலை வெளியிடுக - அப்துல்லா எம்.பி. கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details