திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், "நாட்டின் இறையாண்மை குறித்து பேசிவிட்டு நாட்டை துண்டாக்கும் செயலை ஆர்எஸ்எஸ், பாஜக செய்கிறது. மத மோதல்களை தூண்டி தூண்டி நாட்டில் பிரிவனை ஏற்படுத்த பாஜக முயல்கிறது.
இந்தியாவின் கடன் ரூ.90 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. ரூ.7,000 கோடியை இந்தியா இலங்கைக்கு கொடுப்பதால் என்ன பயன் இருக்கிறது. இலங்கையின் சிங்களர்கள் இந்தியாவிற்கு விசுவாசமாக இருப்பார்களா?. சீனாவின் ஒரு மாகாணமாக இலங்கையை மாற்றிவிட்டது. 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அமைச்சரவையிலிருந்த திமுகவிற்கு கட்சத் தீவை மீட்க நேரம் கிடைக்கவில்லை.
இலங்கையை விட மோசமான நிலைக்கு இந்தியா தள்ளபட்டுக்கொண்டிருக்கிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மறைக்க நினைக்கிறார்கள். சாதனை விளக்க பொதுக்கூட்டம் எதற்கு..? அரசின் செயல் மக்களை சென்றடையும் போது சாதனை விளக்க பொதுக்கூட்டம் தேவையற்றது.
மத்திய அரசின் 8 ஆண்டுகால ஆட்சியும் தமிழ்நாடு அரசின் ஓராண்டு கால ஆட்சியும் சாதனையல்ல வேதனை, சோதனை. ஓராண்டு திமுக ஆட்சியின் ஊழலை கேட்கும் அண்ணாமலை, அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியின் ஊழல் குறித்து ஏன் கேட்கவில்லை. 2024 தேர்தலில் நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்காமல் பாஜக இருப்பார்களா?.