நெல்லை: செட்டிகுளம் பண்ணையூரில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் மாவட்ட பாஜக தலைவர் தயாசங்கர் தலைமையில் நடைபெற்றது. இதல் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் மத்தியில் 8 ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அமைச்சரவை சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்றும் ஒரு அமைச்சர் ஊழல் செய்தார் என்றும் சொல்லமுடியாத அளவிற்கு பிரதமர் மோடி நேர்மையை அளவு கோளாக வைத்து செயல்படுகிறார் என்றும் தெரிவித்தார்.
கண்ணுக்கு தெரியாத கரண்டில் ஊழல்:தமிழ்நாட்டில் கண்ணுக்கு தெரியாத அளவில் ஊழல் செய்வதில் திமுகவினர்கள் வல்லவர்கள் என்றும் தற்போது கண்ணுக்கு தெரியாத கரண்டில் (மின்சாரம்) ஊழல் செய்கிறார்கள் என்றும் குற்றஞ்சாட்டினார்.