தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 18, 2022, 8:54 PM IST

ETV Bharat / state

2024 மக்களைத் தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறும் - காதர் மொய்தீன்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை பொறுத்த அளவு திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும் அதை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேட்டியளித்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும்...காதர் மொய்தீன் பேட்டி
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும்...காதர் மொய்தீன் பேட்டி

நெல்லை:கட்சி நிர்வாகி திருமண நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சி பேரறிஞர் அண்ணா கலைஞர் காமராஜர் நடத்திய நல்லாட்சியினுடைய தொடர்ச்சியாக உள்ளது என நாட்டு மக்கள் பாராட்டிய வருகின்றனர்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும்...காதர் மொய்தீன் பேட்டி

இதில் எந்த சந்தேகமும் இல்லை ஒரு ஆட்சி நடைபெறும் போது ஏற்றத்தாழ்வு என்பது இயற்கையானது ஆனால் ஆட்சியினுடைய கொள்கை கோட்பாடு லட்சியம் மிக தெளிவாக சொல்லப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்று தெளிவாக சொல்லப்பட்டு இந்த திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டிற்க்கு மட்டுமல்ல தென்னகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரியது என தற்போது ஆட்சி நடத்தும் தலைவர் மிகத் தெளிவாக கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு பொருத்தமான ஆட்சி எது என்று சொன்னால் இந்திய மக்கள் கூட்டு கலாச்சாரத்தில் ஊறிப் போனவர்கள் அனைவரும் ஒரு தாயின் மக்கள் என நிலை நிறுத்திக் கொண்டார்கள். இந்திய சுதந்திரத்திற்கு போராடிய அனைத்து சமுதாய மக்களும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

இது இந்த நாட்டினுடைய பாரம்பரியம் இது வடநாட்டில் பின்பற்றப்படுகிறதோ இல்லையோ தென்னாட்டில் பின்பற்றி வருகிறோம் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது தமிழ்நாட்டின் பிரிக்கப்பட முடியாத ஒன்று அனைத்து மதங்களும் இந்த கொள்கையின் அடிப்படையில் உருவாகியது இதுதான் திராவிட பாரம்பரியம் திராவிட மாடல் இது தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாக்கு உரியது இந்தியாவில் இப்படிப்பட்ட நல்லாட்சி வர வேண்டும் என்பதற்காக இங்கு ஆட்சியை நடத்துகிறோம்.

சட்ட திட்டங்களை உருவாக்குகிறோம் கல்வி ஆனாலும் சுகாதார மானாலும் பொதுநலம் என்றாலும் ஏழை எளிய மக்களுக்காக எந்த முயற்சி என்றாலும் அனைத்துக்கும் தமிழ்நாடு அரசு தெளிவான வழியை காட்டி அனைவருடைய நன்மதிப்பை பெற்று வருகிறது. ஆட்சி என்று வந்தால் போடுகின்ற திட்டங்களால் சிலருக்கு எதிர்ப்பு வரத்தான் செய்யும் அது காலப்போகுதியில் சரியாகி விடும்.

சட்ட திட்டங்கள் போடுவது போல வரிகளை மாற்றி அமைப்பது ஆளுகின்ற எந்த ஒரு அரசுக்கும் உரியதுதான் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி அனைவரும் செலுத்தி வருகிறோம். அதில் தமிழ்நாட்டிலிருந்து 6.5 சதவீதம் செலுத்துகிறோம் இந்தியா தரப்பில் நமக்கு தரும் பங்கீடு 2.5% கூட கிடையாது என அவர்களே சொல்கிறார்கள்.அப்படி ஏற்றத்தாழ்வு நிறைய இருக்கும்போது அதையெல்லாம் மாற்றி எல்லா மக்களுடைய நன்மதிப்பை மற்றும் பாராட்டை பெறக்கூடிய ஆட்சியாக உள்ளது.

அதை நாங்களும் பாராட்டி வருகிறோம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் மின் கட்டணம் குறைவு என அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்க்கட்சி என்பது எதிர்க்க வேண்டிய பொறுப்பில் அவர்கள் உள்ளார்கள். ஆனால் ஆளுகின்ற அரசு மக்களுக்கு சுமையை ஏற்படுத்தாத அளவிற்கு இந்த வரி சுமையை ஏற்படுத்தியிருப்பதாக சொல்கிறார்கள் கால போக்கில் அது சரியாகிவிடும் என நாங்கள் நம்புகிறோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கும் இந்த விலை உயர்வுக்கும் எந்த தொடர்பும் கிடையாது மத்திய அரசு கொண்ட கொள்கையினால் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வினால் வேலை இல்லா திண்டாட்டம் எல்லா பகுதிகளும் வந்துள்ளது நாட்டின் 50 சதவீதம் வருமானம் 5% மக்களுக்கு சென்று குவிந்து விட்டது என்று உலகமே கூறி வருகிறது. ஏற்றத்தாழ்வு என்பது தமிழ்நாட்டின் மட்டுமல்ல இந்தியா முழுமையும் உள்ளது.

இந்தியா என்பது வளரக்கூடிய நாடு, இந்தியா என்கிற பெரிய நாடு 10, 20 ஆண்டுகளில் உலக அளவில் மிகப்பெரிய வல்லரசாக மாறுவதற்கான எல்லா அம்சங்களும் உள்ளது. அதனைக் கொண்டு செல்லக்கூடிய பொறுப்பு மத்தியிலும் மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் உள்ளது. நம் நாட்டில் மத்தியில் ஆட்சி செய்பவர்களாக இருந்தாலும் மாநிலத்தின் ஆட்சி செய்பவர்களாக இருந்தாலும் வரி விதிப்பு முறையில் சில மாற்றங்களும் ஏற்றங்களும் இருக்கத்தான் செய்யும் அது காலப்போக்கில் சரியாகிவிடும்.

இந்தியா என்கின்ற நாடு உலக அளவில் மிகப்பெரிய வல்லமை மிக்க நாடாக மாறும்போது இது அத்தனை அடிபட்டு போகும் நாடாளுமன்றத் தேர்தலைப் பொறுத்த அளவு திமுக கூட்டணி 40க்கு 40 வெற்றி பெறும் அதை இப்போதே எழுதி வைத்துக் கொள்ளலாம்.

திமுகவுக்கு பொருத்த வரை 80 சதவீதம் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என அவர்களே கூறுகிறார்கள் சில இன்னும் நிறைவேற்றப்படவில்லை பொருளாதாரம் சீர் அடைந்தவுடன் நிறைவேற்றுவோம் என திமுக அரசு கூறுகிறது அதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
பேட்டியின் போது தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துர்ரகுமான், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க:சாதிய அமைப்புகளை அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றனர் - திருமாவளவன் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details