திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் தினமும் காலை, மாலை வேளைகளில் நூற்றுக்கணக்கானோர் நடைப்பயிற்சி செல்வது வழக்கம். அந்த வகையில் அங்கு நடைப்பயிற்சிக்கு சென்ற வின்சென்ட் (82 வயது), என்பவர், யாரோ தவற விட்டுச் சென்ற 16 கிராம் தங்கச் சங்கிலியை எடுத்து பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரத்திடம் ஒப்படைத்தார்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கச் சங்கிலி நெல்லை, ஜங்சன் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதனையடுத்து உரிய விசாரணைக்கு பிறகு அவரிடம் தங்கச் சங்கிலி ஒப்படைக்கப்பட்டது.