நெல்லை: நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பாரம்பரியமிக்க தூய சேவியர் கல்லூரியின் நூற்றாண்டு விழா நேற்று(ஏப்ரல்.1) கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழக நிதி மற்றும் மனித வள மேம்பாடு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, "தென் தமிழகத்தில் கல்வி, சமுக நலன் மற்றும் பெண்கல்வி என அனைத்து சமுக முன்னேற்றத்திலும் கிறிஸ்துவ மிஷனரிகள் பெரும் பங்கு வகித்திருப்பது பாராட்டிற்குரியது. திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் உயிர் மூச்சாக சமூக நீதி உள்ளது. சமுதாயம் சமூக நீதியை அடைய கல்வியை தவிர வேறு பாதையில்லை. தமிழகத்தில் கல்வி வளர்ச்சி அதிகமாக இருக்கும் பகுதிகளாக கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்கள் திகழ்ந்து வருகிறது. ஆனால், வேலைவாய்ப்பும் பொருளாதாரத்தில் முன்னேறிய நிலை இல்லாமல் இருக்கிறது.