தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Dengue fever - டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு குறைவு - அமைச்சர் விஜயபாஸ்கர் - Dengue fever current update

நெல்லை: தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

vijayabaskar

By

Published : Oct 6, 2019, 10:28 PM IST

Dengue issue Tamilnadu நெல்லை, தனியார் ஓட்டல் ஒன்றில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,

'தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. இது மற்ற மாநிலங்களை விட மிகக்குறைவு. இதுவரை 210 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு காய்ச்சல் பாதிப்புள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஐந்து நாட்கள் வரை காய்ச்சல் பாதிப்புள்ளவர்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயம் அனுமதிக்க அறிவுறுத்தபடுகிறார்கள்.

டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு தேவை. அதற்கான நடவடிக்கைகளும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுவருகிறது. அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் பணிக்காக கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சலை கண்டறியும் வசதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது. இந்த ஆண்டு டெங்கு இறப்பு ஏதுமில்லை.' என்றார்.

செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

இதையும் படிங்க:

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details