தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

COVID Care Centre: தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய முடிவு - கரோனா பரிசோதனை மையம் மற்றும் சிகிச்சை மையம்

கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால், பாளையங்கோட்டையில் படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா பரிசோதனை மையம் மற்றும் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

newly open covid care center  covid center  covid care center  newly opened covid care center in thirunelveli  decidedto take more than thousand test per day in covid center  கரோனா பரிசோதனை மையம்  கரோனா பரிசோதனை மையம் மற்றும் சிகிச்சை மையம்  கரோனா மையமாக மாற்றபட்ட மாநகராட்சி திருமண மண்டபம்
கரோனா பரிசோதனை மையம்

By

Published : Jan 8, 2022, 12:16 PM IST

திருநெல்வேலி: தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநிலத்தில் பரிசோதனைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த வாரம் திருநெல்வேலி மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பு பூஜ்யத்தில் இருந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 100ஐ நெருங்கி வருகிறது.

வரும் நாள்களில் நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நோய்த் தொற்றை கண்டறியும் வகையில் பரிசோதனையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

தினமும் 3 ஆயிரம் பரிசோதனைகள் செய்ய முடிவு

கரோனா பரிசோதனை மையம்

இதையடுத்து பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் பரிசோதனை முகாம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 25 படுக்கைகளுடன் சோதனை மையம் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் மாநகராட்சி நிர்வாகத்தால் செயல் பாட்டுக்கு வருகிறது.

மேலும் ஒரு மருத்துவர் உள்ளிட்ட 5 பேர் பணியில் இருக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுள்ளன. நோய்த் தொற்று பாதிப்புடன் வரும் நபர்களுக்கு முதலுதவி அளிக்கும் வகையில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் உள்ளன.

ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள்

பாதிப்பு குறைவாக இருக்கும் நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிப்பு அதிகம் இருக்கும் நபர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. நாள்தோறும் 3 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளவும், முடிவுகளை 6 மணி நேரத்தில் தெரிவிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இதையும் படிங்க: COVID-19 Tamil Nadu: தமிழ்நாட்டில் புதிதாக 8,981 பேருக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details