தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் பலி: உறவினர்கள் சாலை மறியல்! - Nellai news

நெல்லையில் பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்
பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்

By

Published : Dec 3, 2022, 3:36 PM IST

திருநெல்வேலி:நெல்லை டவுன் சொக்கட்டான் தோப்பை சேர்ந்தவர் அலெக்ஸ் (30) - மகாராணி (25) தம்பதி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டாவது பிரசவத்திற்காக நெல்லை டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகாராணி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று (டிச.2) இரவு மகாராணிக்கு அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தொடர்ந்து இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகாராணி திடீரென உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டோர், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தவறான சிகிச்சை காரணமாகவே மகாராணி உயிரிழந்திருப்பதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர். எனவே மருத்துவமனை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மகாராணியின் இறப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி நெல்லை டவுன் கீழ ரத வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை டவுன் காவல் உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மகாராணி இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை முன்பு காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:அங்கன்வாடி கட்டிட பணிக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது குழந்தை பலி!

ABOUT THE AUTHOR

...view details