சென்னையில் பணிக்குச் சென்றபோது பவித்ரா (22) என்ற பெண் காவலர் ஒருவர் சமீபத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது சொந்த ஊர் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலரியபுரம் கிராமமாகும்.
பவித்ராவின் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.
பணியில் சேர்ந்த மூன்று ஆண்டுகளில் விபத்தில் சிக்கி உயிரிழந்ததால் பவித்ராவின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த பவித்ரா பணியில் சேர்ந்த அதே ஆண்டில் அவருடன் பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவருடைய குடும்பத்திற்கு உதவ முன்வந்தனர்.