தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமணத்தம்பதிகளுக்கு கேஸ் சிலிண்டர் பரிசளித்த நண்பர்களால் கல்யாண வீட்டில் சிரிப்பலை! - tirunelveli

சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், நெல்லையில் திருமணத் தம்பதிகளுக்கு எரிவாயு சிலிண்டரை பரிசளித்த நண்பர்களால் கல்யாண நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.

திருமண தம்பதிகளுக்கு கேஸ் சிலிண்டர் பரிசளித்த நண்பர்களால் கல்யாண வீட்டில் சிரிப்பலை
திருமண தம்பதிகளுக்கு கேஸ் சிலிண்டர் பரிசளித்த நண்பர்களால் கல்யாண வீட்டில் சிரிப்பலை

By

Published : Jun 9, 2022, 3:32 PM IST

நெல்லை:பொதுமக்களின் மிக அத்தியாவசியப் பொருட்களான சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளின் விலை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

குறிப்பாக வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து 1000 ரூபாயைத் தாண்டி விற்பனை ஆகி வருவதால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழலில் சிலிண்டர் விலை ஏற்றத்தால் மக்கள் சந்தித்து வரும் இன்னல்களை மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில், நெல்லையில் திருமண தம்பதிகளுக்கு எரிவாயு சிலிண்டரை பரிசளித்த நபர்களால் கல்யாண நிகழ்ச்சியில் சிரிப்பலை ஏற்பட்டது.

அதாவது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நெல்லை பாளையங்கோட்டை ஒன்றியத் தலைவர் யாபேஸ்சுக்கும் ஜெயாவுக்கும் பாளை தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது. அப்போது மணமகனின் நண்பர்கள் திடீரென கையில் சிலிண்டருடன் மேடை நோக்கி வந்ததால், அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

பின்னர் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சிலிண்டர் பரிசளிக்கிறோம் என்று கூறி, கையில் இருந்த சிலிண்டரை மணமக்களுக்கு வழங்கினர்.

திருமண தம்பதிகளுக்கு கேஸ் சிலிண்டர் பரிசளித்த நண்பர்களால் கல்யாண வீட்டில் சிரிப்பலை

இதுகுறித்து சிலிண்டர் பரிசளித்த சிவந்தியப்பன் கூறுகையில், 'நண்பர்கள் குழு சார்பில் மணமக்களுக்கு சிலிண்டர் அன்பளிப்பாக கொடுத்துள்ளோம்.

சிலிண்டர் விலை ஏற்றம் மக்களை நேரடியாகப் பாதிக்கிறது. எனவே, சிலிண்டர் விலையைக் குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மக்களுக்கு விலை ஏற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்திலும் சிலிண்டர் பரிசளித்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: நெல்லையில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்:பொதுமக்கள் பீதி..!

ABOUT THE AUTHOR

...view details