நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே அழகியநேரி பகுதியில் சதீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று (நவ. 03) இவரது வீட்டில் இருந்த சிலிண்டரானது திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. பதட்டமடைந்த சதீஸ் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்பேரில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரராஜ் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது சிலிண்டரில் இருந்து காஸ் வெளியேறும் துளை வழியாக தீ எரிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு அத்தீயை அணைத்ததோடு, சிலிண்டரை பாதுகாப்புடன் வெளியே எடுத்துச் சென்றனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.