கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தபட்டு இன்றோடு (மே 2) 39 தினங்கள் ஆகின்றன. இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் 30 பேர் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முழு ஊரடங்கு உத்தரவு: கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம் - நெல்லைச் செய்திகள்
நெல்லை: முழு ஊரடங்கு உத்தரவையடுத்து காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
![முழு ஊரடங்கு உத்தரவு: கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம் Fish](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7031489-903-7031489-1588417668848.jpg)
Fish
கடைகளில் அலை மோதிய மக்கள் கூட்டம்
கரோனா பரவலைத் தடுக்க மாநகாரட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில் ஏப்ரல் 26ஆம் தேதியும் மே 3ஆம் தேதியும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் நாளை (மே 3) முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் இன்று (மே 2) மீன், சிக்கன், மட்டன், காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு சில இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்றாமலும் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.