நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவியில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் களைகட்டும். மேலும் உங்கள் வழிகளில் குளித்தலையில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவார்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தென்காசி சுற்று வட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் பிரதான அருவியான குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டு நாட்கள் தடை விதித்தனர். இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அருவியில் நீர்வரத்து குறைந்து இன்று காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.