கேரளாவில் பெய்து வரும் மழையால், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
குற்றாலத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - குற்றால அருவி
திருநெல்வேலி: குற்றாலத்தில் நீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சீசன் முடிந்தபிறகும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் படையெடுத்துவருகின்றனர்.
குற்றாலாம் அருவி
இந்நிலையில், இன்று விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலும், மாநிலங்களிலுமிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கடந்த 15 தினங்களுக்கு முன்னரே சீசன் முடிந்தும் படையெடுத்து வரும் சுற்றுலா பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்