நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் இன்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் குற்றாலம் பேரருவி, ஐந்து அருவி, பழைய குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு! சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை - குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
நெல்லை: குற்றாலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்துவருவதால், அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது