திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியைச் சேர்ந்தவர் சிவாஜி. இவரிடம் அமமுக மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் நியாஸ் என்பவர், பழைய தங்க நகைகளை புதிய தங்க நகையாக மாற்றி தருவதாகக் கூறி 38 லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வைரம் மற்றும் கருப்பு வைரம் தொழில் செய்வதற்கும் சேர்த்து பணம் வாங்கியதாகத் தெரிகிறது.
அமமுக முக்கிய புள்ளி மீது பண மோசடி புகார்; தென்காசியில் பரபரப்பு! - ammk
திருநெல்வேலி: தென்காசியில் ஆயிரப்பேரியைச் சேர்ந்த சிவாஜி என்பவர் அமமுக மாவட்ட இணைச்செயலாளர் சிக்கந்தர் நியாஸ் மீது பணமோசடி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சிக்கந்தர் நியாஸ் தவறான தொழில் செய்வதாக சிவாஜியின் காதிற்கு எட்டியுள்ளது. இதனால், சிக்கந்தர் நியாஸிடம் கொடுத்த பணத்தை சிவாஜி திரும்ப கேட்டுள்ளார். ஆனால் சிக்கந்தர் பணத்தை தருவதாகக் கூறி ஏமாற்றி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவாஜி இதுகுறித்து குற்றாலம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, தான் வாங்கிய பணத்தை தவணை முறையில் தருவதாக சிவாஜியிடம் சிக்கந்தர்கூறியுள்ளார்.
ஆனால், சிக்கந்தர் கூறியபடி இரண்டு மாதங்கள் ஆகியும் கொடுத்த பணத்தை தரவில்லை, தவணை முறையிலும் செலுத்தவில்லை. பணத்தை பறிகொடுத்த சிவாஜி, இது குறித்து மீண்டும் குற்றாலம் ஆய்வாளர் சுரேஷ்குமாரிடம் புகார் அளித்துள்ளார். அவரது புகாரை ஏற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். மேலும், ஏமாற்றப்பட்ட பணத்தை விரைவில் காவல் துறையினர் கண்டுபிடித்து தர வேண்டும் இதுபோல் நிறைய பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாகவும் அனைத்திற்கும் ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் சிவாஜி தெரிவித்துள்ளார்.